செம்மடை தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் மாயம். சகோதரனை காணவில்லை சகோதரி புகார்.
செம்மடை தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் மாயம். சகோதரனை காணவில்லை சகோதரி புகார்.;
செம்மடை தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் மாயம். சகோதரனை காணவில்லை சகோதரி புகார். சேலம் மாவட்டம், போடிநாயக்கன்பட்டி, ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் வயது 35. இதே போல நாமக்கல்மாவட்டம், பரமத்தி வேலூர்,மணியனூர், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி காமாட்சி வயது 38. இவர் சோமசுந்தரத்தின் உடன் பிறந்த சகோதரி. இவர்கள் இருவரும் கரூர் மாவட்டம், செம்மடை பகுதியில் செயல்படும் தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் தங்கி கூலி வேலை வந்தனர், இந்த நிலையில் மே 15ஆம் தேதி இரவு 9:30- மணி அளவில், சோமசுந்தரம் டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் நிறுவனத்திற்கு திரும்பவில்லை. தனது சகோதரனை காணாததை கண்டு காமாட்சி அதிர்ச்சி அடைந்தார், மேலும் சோமசுந்தரம் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடி பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறாததால், காமாட்சி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாயமான சோமசுந்தரத்தை தேடி வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.