மனோகரா கார்னர் அருகே காரில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் வந்த நபர் கைது.

மனோகரா கார்னர் அருகே காரில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் வந்த நபர் கைது.;

Update: 2025-05-24 12:30 GMT
மனோகரா கார்னர் அருகே காரில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் வந்த நபர் கைது. திருச்சி மாவட்டம், முசிறி, எம். கருப்பம்பட்டி அருகே மேற்கு அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் வயது 35. இவர் மே 23ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், கரூர், மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே காரில் வரும்போது, தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் வந்ததை பார்த்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி அவரை பிடித்து, தேசிய கொடியை அவமதித்ததாக கூறி அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த கரூர் நகர காவல் துறையினர், காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News