உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் ராசுக்குட்டி (31). இவர் நேற்று முன் தினம் உத்தமபாளையம் சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது எதிர் திசையில் ஸ்ரீதரன் என்பவர் ஓட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ராசுகுட்டி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் நேற்று (மே.23) வழக்கு பதிவு.