காந்திகிராமத்தில் டூவீலர்கள் மோதல்.பெண் படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவு.
காந்திகிராமத்தில் டூவீலர்கள் மோதல்.பெண் படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவு.;
காந்திகிராமத்தில் டூவீலர்கள் மோதல்.பெண் படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் ,புலியூர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் வயது 55.இவரது மனைவி இந்திராணி வயது 45. இவர்கள் இருவரும் மே 20 ஆம் தேதி காலை 6 மணி அளவில்,திருச்சி - கரூர் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் காந்திகிராமம் பகுதியில் செயல்படும் பிரபல தனியார் ஸ்வீட் கடை அருகே வந்தபோது, அதே சாலையில் பின்னால் டூவீலரில் வந்த மற்றொரு நபர்,ஜெயபால் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த அவரது மனைவி இந்திராணிக்கு இதனால் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெயபால் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட ,காவல்துறையினர் , டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். |தாந்தோணி மலை காவல்துறையினர்.