தேனி அரண்மனை புதூர் அருகே பஞ்சு மெத்தை, தலையணை தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது போடிநாயக்கனூரைச் சேர்ந்த நவீன் குமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் இன்று மாலையில் பணியாளர்கள் மதிய உணவிற்காக வெளியே சென்றுள்ளனர் அப்போது திடீரென சிறிய அளவில் குடோனில் தீ பற்றி எரிய தொடங்கி தீ மள மளவென பரவி புகைமண்டலமாக காட்சியளித்தது இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தேனி, போடி ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர் மின் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது திடீரென பற்றி எரிந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மெத்தைகள், தலையணைகள் பற்றி எரிந்து சேதம் ஆகியுள்ளது மதிய உணவிற்காக பணியாட்கள் அனைவரும் வெளியே சென்றதால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் இன்றி விபத்து ஏற்பட்டுள்ளது