கொமதேக மோகனூர் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்! நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்பு!
மோகனூர் வடக்கு ஒன்றியம் 5 ஊராட்சிக்குட்பட்ட 15 பூத்களில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம், ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.;
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மோகனூர் வடக்கு ஒன்றியம் சார்பில் அணியாபுரத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.மோகனூர் வடக்கு ஒன்றியம் 5 ஊராட்சிக்குட்பட்ட 15 பூத்களில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம், ஒன்றிய கூட்டம் நடைபெற்றது இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதன் விவரம் வருமாறு. வங்கியில் வழங்கப்படும் நகை கடனை பழைய முறையிலேயே வழங்கி விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பயனாளிகளின் சிரமங்களை தவிர்க்க மத்திய அரசு முயல வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு இது சம்பந்தமாக கோரிக்கை வைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.மோகனூர் சர்க்கரை ஆலையின் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் பல கோடி செலவு செய்து பயனற்ற நிலையில் இருப்பதை உடனடியாக அரசு சீர் செய்ய வேண்டும். மோகனூர் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைத்து இப்பகுதி மக்களின் விவசாய வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோரிக்கை ஏற்று கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகை 23.5 கோடியை வழங்கிய ஆலை நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. *இக் கூட்டத்தில் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினரும் பிஎஸ்என்எல் கமிட்டி உறுப்பினருமான ஆர்எஸ்ஆர் மணி, நாமக்கல் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பச்சைத்துண்டு பழனிமலை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பிரேமலதா, ஒன்றிய செயலாளர் குப்புசாமி,மோகனுர் ஒருங்கிணைந்த ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சுதா, ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ், ஒன்றிய தலைவர் சண்முகம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கார்த்தி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செல்வி, பரளி ஊராட்சி மகளிர் அணி வனிதா, மோகனூர் நகர செயலாளர் செல்வராஜ் மற்றும் பரளி, சின்னபெத்தாம்பட்டி, அணியாபுரம், தோளூர், லத்துவாடி பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.