பாஜக சார்பில் ஜூன் 22-ல் மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் சோளிங்கர் அடுத்த மருதாலம் கூட்ரோட்டில் அமைந்துள்ள ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். இராணிப்பேட்டை மாவட்டத்தின் பொறுப்பாளர், மாநில பொதுச்செயலாளர், பெருங்கோட்ட பொறுப்பாளர், கார்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.