ஸ்ரீ மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
வத்தலக்குண்டு அருகே ஸ்ரீ மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்;
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டு ஸ்ரீ மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. ஒரு வார காலம் நடந்த திருவிழாவில் அம்மன் மண்டகப் படிகளில் எழுந்தருளினார் இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காவடி பால்குடம் தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் இறுதி நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது ஸ்ரீ மகா பரமேஸ்வரி மாரியம்மன் உற்சவர் சிலையுடன் தேரோட்டம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் தொடங்கிய தேரோட்டம் பழைய வத்தலக்குண்டு கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இந்நிகழ்வில் மேளதாளம், தாரை தப்பட்டை, ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.