பங்குத்தந்தை ஜோசப்ராஜ் சர்ச்சை பேச்சு

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் பங்குத்தந்தை ஜோசப்ராஜ் தமிழக முதல்வருக்கு எதிராகவும், விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கு ஆதரவாகவும் பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது;

Update: 2025-05-24 19:40 GMT
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்தவ வன்னியர்களுக்கான மாநில மாநாட்டில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பங்குத்தந்தை ஜோசப்ராஜ் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும், விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கு ஆதரவாகவும் பேசியது. மேட்டுப்பட்டி பங்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல்வேறு கட்சிகளை சார்ந்த நபர்கள் இருக்கக்கூடிய மேட்டுப்பட்டி பங்கில் ஒரு கட்சி சார்ந்து பேசியது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

Similar News