குழந்தை ஏக்கத்தில் கணவன், மனைவி தற்கொலை

மதுரை ஒத்தக்கடை அருகே கண்மாய் கரையில் கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.;

Update: 2025-05-25 02:28 GMT
மதுரை மாவட்டம் இலங்கிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாக்கூர் கிரா மத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (68). இவரது மனைவி அழகுமுத்து (58) . இவர்கள் இருவரும் அங்குள்ள கண்மாய்க்கரையில் விஷம் குடித்து பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர் கள் ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத் துக்கு சென்று 2 பேரின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தன்ராஜுக்கு சொந்த ஊர் சமயநல்லூர். அங்கு அரிரி வியாபாரம் செய்து வந்தார். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், தங்களுக்கு குழந்தைபிறக்கவில்லைஎன்று கணவன், மனைவி வருத்தத்தில் இருந்து உள்ளனர். இவர்களது குல தெய்வம் ஒத்தக்கடை அருகே உள்ள சித்தாக்கூர் கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் (மே.23) மாலை தன்ராஜும் அவரது மனைவி அழகுமுத்துவும், குல தெய்வம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பிறகு தாங்கள் வைத்திருந்த விஷத்தை 2 பேரும் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணை யில் தெரியவந்தது.

Similar News