வேன் திருடிய மூவர் கைது.

மதுரை சோழவந்தன் அருகே வேனை திருடிய மூவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-05-25 02:31 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் அறிவழகன் என்பவர் தனது மினி சரக்கு வேனை விக்கிரமங்கலம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தியிருந்த போது மே 20ல் திருடுபோனது.இது குறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த திருட்டு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கச்சிராயிருப்பு கோபாலகிருஷ்ணன் (36), கோச்சடை அழகேந்திரன்( 37), முத்தையா( 34), ஆகியோரை சோழவந்தான் போலீசார் கைது செய்து வேனை மீட்டனர்.

Similar News