கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது;
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் டிஎஸ்பி சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் DSP.தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது குரும்பபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல், வேடப்பட்டி, அந்தோணியார்கோவில் தெரு பகுதியை சேர்ந்த முகமதுயாசின் மகன் ரஸ்புதீன்(27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.