நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் எஸ்என்டி ரோடு பகுதியில் பழமை வாய்ந்த குமரன் கல்வி நிலையம் உள்ளது இந்தப் பள்ளியில் 1990 முதல்1995 வரை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியின் அருகில் உள்ள விவி மகாலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் செந்தில்குமார், ராஜா ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.92 மாணவர்களை இணைக்க முடித்ததாகவும் அதில் 60க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு இருப்பதாகவும் மற்றவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாலும் வெளிமாநிலங்களில் பல்வேறு பணிகளில் இருப்பதாலும் கலந்து கொள்ள இயலவில்லை எனவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு சென்று அமர்ந்து ஒருவரோடு ஒருவர் பேசி கரும்பலகைகளை தடவி நெகிழ்ந்து போனார்கள்.பத்து வயதில் படித்த பள்ளியில் தற்போது 45 வயதுகளில் திரும்ப வந்திருப்பது அதே வகுப்பறையில் அமர்வது தங்களுக்கு மகிழ்வளிப்பதாகவும் தெரிவித்தனர் தாங்கள் பயின்ற காலத்தில்பள்ளி பணியிலிருந்துதற்போது மறைந்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் வருகை தந்த முன்னாள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள் பள்ளிக்கு தங்களால் இயன்ற உதவியாக பீரோ ஒன்றைமுன்னாள் மாணவ மாணவிகள் பரிசளித்தனர்.நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் தற்போதைய ஆசிரியர் சாந்தி பேசிய போது 500 பேர் படித்த பள்ளி13 ஆசிரியர்கள் வேலை பார்த்த பள்ளிதற்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது 420 மாணவர்கள் இருந்தால் தான் 13 ஆசிரியர்கள் பணியாற்ற முடியும் எனவே முன்னாள் மாணவர்கள் தங்களது குழந்தைகள் தங்களுக்கு தெரிந்தவர்கள் அது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்போது பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியும் கற்பிக்கப் படுகிறது ஆங்கில வழி கல்வி இல்லை என்பதால் வேறு பள்ளிகளில் சேர்த்துவதாக கூறி வந்த நிலையை மாற்றுவதற்காக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை மற்றும் 4, 5 வகுப்புகளுக்கும்ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக ஸ்போக்கன் இங்கிலீஷ்,அடிப்படைக் கணக்கு மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது என கூறினார் நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும் பகுதிமுன்னாள் நகர் மன்ற உறுப்பினருமானமுருகேசன் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சரோஜா, தெய்வ குஞ்சனி,செல்வமணி மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் முன்னாள் மாணவிஅம்பிகா ஆகியோர் கூறியதாவது35 ஆண்டுகளுக்கு முன் படித்த நண்பர்களோடு சந்திப்பு நிகழ்ச்சி என்பது எங்களுக்கு நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறது இதுபோல் அனைத்து பள்ளிகளிலும் படித்தவர்கள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி தங்கள் பள்ளிகளுக்கு இயன்றதை செய்து தர வேண்டும் எங்கள் உயர்வுக்கு காரணமான இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு நாங்கள் முழுமையாக பாடுபடுவோம் தமிழ் வழிக் கல்வியில் கற்று தான் நாங்கள் முன்னேறி இருக்கிறோம் எனவே தமிழ் வழிக் கல்வியில் கற்க மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.அரசு பள்ளிகளில் படிப்பதை பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி அரசு பள்ளிகளை வளர்க்க வேண்டும்என கூறினார்கள்.