கரூர் ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா- நீர் மோர் பந்தலை செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
கரூர் ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா- நீர் மோர் பந்தலை செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.;
கரூர் ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா- நீர் மோர் பந்தலை செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் தாகம் தீர்க்கும் வசதிக்காக கரூர் மாவட்ட திமுக சார்பில் கோவில் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது, அதனை இன்று முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா,துணை மேயர் தாரணி சரவணன்,மண்டல தலைவர் கோல்ட் ஸ்பாட் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.