வேலாயுதம்பாளையம்- மணமக்களை வாழ்த்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வேலாயுதம்பாளையம்- மணமக்களை வாழ்த்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்;

Update: 2025-05-25 10:55 GMT
வேலாயுதம்பாளையம்- மணமக்களை வாழ்த்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் அண்ணா வேலு மகளின் திருமண வரவேற்பு விழா கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளான சிவராம்பிரசாந்த் - காவ்யா ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக வேலாயுதம்பாளையம் வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Similar News