வெங்கடாபுரத்தில் குடும்பத்த தகராறு காரணமாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.

வெங்கடாபுரத்தில் குடும்பத்த தகராறு காரணமாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-05-25 12:04 GMT
வெங்கடாபுரத்தில் குடும்பத்த தகராறு காரணமாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி மனைவி சிந்தாமணி வயது 30. இவர்கள் இருவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வெங்கடாபுரத்தில் உள்ள அவரது தாயார் லட்சுமி வீட்டிற்கு சென்றார் சிந்தாமணி. மேலும் விரக்தி அடைந்த மனநிலையில் இருந்த சிந்தாமணி மே 24ஆம் தேதி அதிகாலை 5.45- மணி அளவில், அவரது தாயார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த லட்சுமி இது குறித்து காவல்துறையினர்க்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சிந்தாமணி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News