லிங்கம்மா நாயக்கன் பட்டியில் தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
லிங்கம்மா நாயக்கன் பட்டியில் தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.;
லிங்கம்மா நாயக்கன் பட்டியில் தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், கத்தாளப்பட்டி அருகே உள்ள சின்னதாதம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் வயது 35. இவரது மகள் நித்ரா வயது 4 மாதம். குழந்தைக்கு மே21 ஆம் தேதி மண்மாரி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி செலுத்திய பிறகு குழந்தைக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. குழந்தையை அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆயினும் குணமடையாததால், குழந்தையை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அன்றைய தினமே சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி அன்று மாலை 6 மணி அளவில் குழந்தை உயிர் இழந்தது. சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை முனியப்பன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த குழந்தை உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.