காமராஜ் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை. ஒருவர் கைது.
காமராஜ் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை. ஒருவர் கைது.;
காமராஜ் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை. ஒருவர் கைது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே 24ஆம் தேதி மாலை 4 மணி அளவில், காமராஜர் மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் வயது 63 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த கள்ள லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், சண்முகத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர். .