உதகையில் மழை பாதிப்பு -

மு.பெ.சாமிநாதன் - அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு...;

Update: 2025-05-25 17:04 GMT
உதகையில் மழை பாதிப்பு - முகாம்களில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் - அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு நீலகிரி மாவட்டம், உதகையில் கன மழை பெய்து வருவதால், அழகர்மலை, தலையாட்டுமந்து ஆகிய தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை, அந்தந்த முகாம்களில் உள்ளவர்களை மாவட்ட பொறுப்பு அமைச்சர்- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களும், தேர்தல் பணி செயலாளர் - அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்களும் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான கம்பளி போர்வைகள், உணவு உள்ளிட்டவைகளை வழங்கினர். மேலும், உதகை ஹில் பங்க் சாலையில் கார் மீது மரம் விழுந்ததையும் பார்வையிட்டனர். உடன், நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதி வெங்கடேஷ், உதகை நகர இளைஞர் அணி அமைப்பாளர் விஷ்ணுபிரபு மற்றும் அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் உள்ளனர்

Similar News