உதகையில் - மரம் விழுந்து சுற்றுலாப்பயணி பலி
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் - அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி;
;உதகையில் - மரம் விழுந்து சுற்றுலாப்பயணி பலி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் - அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி நீலகிரி மாவட்டம், உதகையில் கனமழை பெய்துவரும் நிலையில், சுற்றுலா தலமான பைன் பாரஸ்ட் பகுதியில் கேரளா மாநிலத்தை சார்ந்த 15 வயது சிறுவன் மீது மரம் விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிந்தார். தகவல் அறிந்தவுடன், மாவட்ட பொறுப்பு அமைச்சர்- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களும், தேர்தல் பணி செயலாளர் - அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்களும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுவனின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உடலை கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். உடன், நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதி வெங்கடேஷ், உதகை நகரமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரபு மற்றும் பலர் உள்ளனர்.