உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை

பைன் பாரஸ்ட் பகுதியில் மரம் விழுந்ததில் கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி...;

Update: 2025-05-25 17:16 GMT
உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உதகை அருகே உள்ள பைன் பாரஸ்ட் பகுதியில் மரம் விழுந்ததில் கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி ............ நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது இந்நிலையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், உதகை அருகே சுற்றுலாத் தலமான பைன் பாரஸ்ட் பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று விழுந்ததில் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் இரண்டு பேர் மீது மரம் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்த நிலையில் உதவி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அதி கனமழை பெய்து வரும் நிலையில், மழை முடியும் வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News