கபடி போட்டியில் கஸ்டம்ஸ் அணி முதலிடம்
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் நடந்த கபடி போட்டியில் கஸ்டம்ஸ் அணி முதலிடம் பெற்றது;
மதுரை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை பகுதியில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் இரண்டு நாட்கள் கபாடி போட்டியை நேற்று முன்தினம் மாலை தொடங்கி வைத்தார்கள். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ,ஆர் பி உதயகுமார் கபடி போட்டி நிகழ்ச்சிக்கு விழா பேனர், அழைப்பிதழில் பெயர் இருந்தும் 2 நாள் போட்டிகளிலும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். நேற்று (மே.25) நடைபெற்ற இறுதி கபாடி போட்டியில் முதல் பரிசாக மதுரை கஸ்டம்ஸ் அணியினர் ரூபாய் 71 ஆயிரம் கோப்பை கேடயமும், 2வது பரிசாக கோபி பிரதர்ஸ் திருப்பரங்குன்றம் அணியினர் ரூபாய் 51 ஆயரம் கோப்பை கேடயமும் 3வது பரிசாக மதுரை மேல கல்லாங்குளம் அணியினர் ரூபாய் 31 ஆயிரம் கோப்பை கேடயமும்,நான்காவது பரிசாக கருமாத்தூர் நேதாஜி அகடமி ரூபாய் 21 ஆயிரம் மற்றும் கோப்பை கேடயம் பெற்றனர்.