ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களிடம் ஆறுதல் கூறிவரும் சட்டமன்ற உறுப்பினர்;
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு விறைத்து சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேரணாம்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து பெரியவரிகம் அருகே வந்தபோது, எதிர்திசையில் தோல் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி சாலையின் பார்வை குறைவான வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனை கவனித்த அரசு பேருந்து ஓட்டுநர் விபத்தை தவிர்க்க பேருந்தை திருப்பியபோது, அதிவேகமாக வந்த லாரி பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் ராஜா, நடத்துநர் குணசேகரன், 6 மாத கர்ப்பிணி பெண் உட்பட 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவல் தெரிந்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் ஆறுதல் கூறி மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் உடன் வருவாய் அலுவலர் மற்றும் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர் இதில் பேருந்து ஓட்டுநர் ராஜா மற்றும் கர்ப்பிணி பெண் ரஞ்சனி உட்பட நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உமராபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.