திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (மே 26) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தாழையூத்து,சங்கர்நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.