மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்க தடை
மணிமுத்தாறு அருவி;
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.