அகில இந்திய கூடைப்பந்து போட்டி- செளத் சென்ட்ரல் ரயில்வே பெண்கள் வெற்றி.

அகில இந்திய கூடைப்பந்து போட்டி- செளத் சென்ட்ரல் ரயில்வே பெண்கள் வெற்றி.;

Update: 2025-05-26 10:15 GMT
அகில இந்திய கூடைப்பந்து போட்டி- செளத் சென்ட்ரல் ரயில்வே பெண்கள் வெற்றி. கரூர் கூடைப்பந்து குழு சார்பில், எல்.ஆர்.ஜி. நாயுடு சுழற்கோப்பைக்கான, 65வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த, 22 முதல், திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வருகிறது. வரும், 27 வரை போட்டி நடக்கிறது. நேற்று இரவு நடந்த பெண்கள் பிரிவு போட்டியில் செளத் சென்ட்ரல் ரயில்வே அணியும்,சதர்ன் இரயில்வே அணிகளும் மோதின. இதில், 55 க்கு 35 என்ற புள்ளிக்கணக்கில் செளத் சென்ட்ரல் ரயில்வே அணி வெற்றி பெற்றது. ஆண்கள் பிரிவில் இந்தியன் ஆர்மி, இந்தியன் ஏர் போர்ஸ் அணிகள் மோதின. இதில், 89க்கு 82 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியன் ஆர்மி வெற்றி பெற்றது.

Similar News