வெங்கமேடு அருகே டூவீலர்கள் மோதல்.இருவர் படுகாயம், காவல்துறை வழக்கு பதிவு

வெங்கமேடு அருகே டூவீலர்கள் மோதல்.இருவர் படுகாயம், காவல்துறை வழக்கு பதிவு;

Update: 2025-05-26 10:50 GMT
வெங்கமேடு அருகே டூவீலர்கள் மோதல்.இருவர் படுகாயம், காவல்துறை வழக்கு பதிவு கரூர் மாவட்டம் வெங்கமேடு கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் அன்பரசன் வயது 35. இவர் மே 24ஆம் தேதி இரவு 10 20 மணியளவில், கரூர்- செம்மடை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் வெங்கமேடு புளியமரம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, அதே சாலையில் பின்னால் வந்த கரூர், வாங்கப்பாளையம் ஜீவா நகரை சேர்ந்த பாலாஜி வயது 24 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் , அன்பரசன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து . இதில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அன்பரசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலாஜி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Similar News