நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள இத்தலார் பகுதியில் இருந்து பெம்பட்டி செல்லும் சாலையில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது...

போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது...;

Update: 2025-05-26 15:59 GMT
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள இத்தலார் பகுதியில் இருந்து பெம்பட்டி செல்லும் சாலையில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது... நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்து சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது‌. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,மாவட்டத்தில் உதகை,கூடலூர்,பந்தலூர்,குந்தா உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் உதகை அருகேயுள்ள இத்தலார் பகுதியில் இருந்து பெம்பட்டி செல்லும் கிராமப்புறப் சாலையில் மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் இத்தலார் பகுதியில் இருந்து பெம்பட்டி செல்லும் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள்,பணிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டு உள்ளது. தற்போது மண்சரிவு ஏற்ப்பட்டுள்ள பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் சாலையில் விழுந்துள்ள மண்,கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கனமழையயையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்லக்கூடிய நிலை ஏற்ப்பட்டு உள்ளது‌‌.

Similar News