புதிதாக கட்டப்பட்டு வரும் கேத்தி காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதம்.

விடாமல் பெய்யும் தொடர் மழை;

Update: 2025-05-26 16:05 GMT
புதிதாக கட்டப்பட்டு வரும் கேத்தி காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதம்.................... நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதலே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வந்தது.கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது.இந்த நிலையில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், பலத்த காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் காவல் நிலையத்தின் மீது இராட்சத கற்பூர மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதமடைந்தது.அதேபோல மின் கம்பிகள் மீதும் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தற்போது சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு தீயணைப்பு துறையினர் சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News