ரிங்ரோடு நிலம் எடுப்பு - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ரிங் ரோடு நிலம் எடுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-05-27 04:02 GMT
திண்டுக்கல் அருகே ரிங் ரோட்டுக்கு விவசாயிகளுடைய நிலங்களை அடிமாட்டு ரேட்டுக்கு வாங்குவதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் திருச்சி பைபாஸ் ரோட்டில் இருந்து சிறுமலை அடிவாரத்தை தொட்டு மதுரை ரோடு வரைக்கும் ரிங்ரோடு செல்கிறது. இந்த ரோட்டுக்கு விவசாய நிலங்கள் எடுக்கப்படுகின்றன. கிணறுகள் மூடப்பட்டு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதற்கு நஷ்ட ஈடாக சில லட்சங்களை மட்டும் அளித்துவிட்டு பல கோடி ரூபாய் மோசடி நடக்கிறது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் முன்னாடியாக தலையிட்டு நிலங்களை அளந்து உரிய நஷ்ட ஈடுகளை, 10 மடங்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Similar News