போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சேலத்தில் ரிங் ரோடு அமைக்க

கொங்கு வேளாளர் அறக்கட்டளை வெள்ளி விழாவில் கோரிக்கை;

Update: 2025-05-27 04:07 GMT
சேலம் கொங்கு வேளாளர் அறக்கட்டளை வெள்ளி விழா வெள்ளக்கல்பட்டி கொங்கு எஸ்.ஆர்.வி. இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. சேலம் திருவேணி குழும தலைவர் பி.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் எஸ்.முத்துராஜன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ராம்ராஜ் காட்டன் நிறுவன தலைவர் கே.ஆர்.நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். விழாவில் கொங்கு சமுதாய சாதனையாளர்கள், சங்க முன்னாள் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தப்பட்டனர். விழாவில் வெள்ளி விழா மலர் வெளியிடப்பட்டது. விழாவில் பஹல்காம் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலை கண்டிப்பது, சேலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சேலம் மாநகரை சுற்றி ரிங் ரோடு அமைக்க வேண்டும். மேட்டூர் அணையின் உபரிநீர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஏரிகளுக்கும் இன்னமும் செல்லவில்லை. எனவே தூர்வாரப்படாத ஏரிகளையும் தூர்வாரி மேட்டூர் உபரிநீரை அனைத்து ஏரிகளுக்கும் நிரப்ப வேண்டும். விவசாயத்துக்கு தேவையான வண்டல் மண்ணை ஏரிகளில் இருந்து எடுக்க மாநில அரசு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News