ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்;
திண்டுக்கல் அருகே ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஒரு குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை என் புதுப்பட்டி சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆகிவிட்டார். இது குறித்து நான் ஊர் கூட்டத்தில் புகார் அளித்தேன். அந்தக் கூட்டத்தில் அவரும் எனது மகளை திருமணம் செய்வதாகவும் ஒப்புக்கொண்டார். ஆனால் திருமணம் செய்ய மறுத்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தேன். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து ஊர் பெரிய தனம் மற்றும் அவரது உறவினர்கள் எல்லாம் சேர்ந்து என்னையும் என் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள். காலில் விழுந்து கும்பிடச் சொல்லி வற்புறுத்தினார்கள். ரூ 5 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். இதனால் ஊர் திருவிழா உட்பட எந்த நல்ல காரியத்திலும் எங்களை புறக்கணிப்பதால் நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம். இவ்வாறு வழக்கறிஞர் தேவராஜ் மூலம் புகார் அளித்தனர்.