பெண்களுக்கு உறுப்பினர் அட்டை

அட்டை;

Update: 2025-05-27 04:19 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்ட பல்வேறு கல்வி உதவி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் உளுந்துார்பேட்டை மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, சீருடைகள் தைத்து வழங்கப்பட்டு வருகிறது. சீருடைகள் தைத்து வழங்கும் பொருட்டு கல்வராமன்மலை பகுதியைச் சேர்ந்த 16 மலைவாழ் பெண்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த், பெண்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News