உலக கால்பந்து தினத்தையொட்டி ஐவர் கால்பந்துபோட்டி

நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உலக கால்பந்து தினத்தை யொட்டி ஐவர் கால்பந்து போட்டி நிலக்கோட்டை அணி கோப்பையை கைப்பற்றியது;

Update: 2025-05-27 04:46 GMT
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நிலவை கால்பந்து குழு சார்பில் உலக கால்பந்து தினத்தை யொட்டி ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கால்பந்து அணிகள் போட்டியில் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டங்களாக நாக் அவுட் முறையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் இறுதிப் போட்டியில் நிலக்கோட்டை கால்பந்து கழக அணியும் திண்டுக்கல் கால்பந்து கழக அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 4:0 என்ற கோல் வித்தியாசத்தில் நிலக்கோட்டை கால்பந்து கழக அணி கோப்பையை கைப்பற்றியது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் நான்கு இடங்களை பிடித்த கால்பந்து அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. கால்பந்து போட்டிகளை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

Similar News