அரக்கோணம் நகர போலீசார், மங்கம்மா பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த இருவரை சோதனை செய்தபோது, துப்பாக்கி உடன் தோட்டாக்கள் வைத்திருந்தனர் துப்பாக்கிகளையும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து விசாரித்ததில், கே எம் பாபு மற்றும் தினேஷ் என்பது தெரியவந்தது. பாபு அரக்கோணம் 6வது வார்டு உறுப்பினராக உள்ளார், மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.