வெள்ளத்தாரையில் டூவீலர்கள் மோதல்.ஒருவர் படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவு.
வெள்ளத்தாரையில் டூவீலர்கள் மோதல்.ஒருவர் படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவு.;
வெள்ளத்தாரையில் டூவீலர்கள் மோதல்.ஒருவர் படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் , புகலூர் தாலுகா, நடையனூர் அருகே முனியப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் வயது 65. இவர் மே 26 ஆம் தேதி காலை 7:45 மணி அளவில் கொடுமுடி - வேலாயுதம்பாளையம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வெள்ளத்தாரை பகுதியில் உள்ள சந்தானம் என்பவரது வீடு அருகே சென்ற போது , அதே சாலையில் பின்னால் வந்த புகலூர் தாலுகா, முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் வயது 48 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் ,மனோகரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது .இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் மனோகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த மனோகரனின் சகோதரர் ராமலிங்கம் வயது 59 என்பவர் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , டூவீலரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம் பாளையம் காவல்துறையினர்.