வையப்பமலை முருகன் கோவிலுக்கு மாற்று பாதை அமைக்கும் பணி எம்எல்ஏ ஈஸ்வரன் ஆய்வு
வையப்பமலை முருகன் கோவிலுக்கு மாற்று பாதை அமைக்கும் பணி எம்எல்ஏ ஈஸ்வரன் ஆய்வு;
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் வையப்பமலை அருள்மிகு சுப்ரமணியன் கோவிலுக்கு படிக்கட்டுகள் மூலமே பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதனை கருத்தில் கொண்டு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அனுமதியோடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் ஒத்துழைப்போடு நான்கு கோடி 56 லட்சம் செலவில் அருள்மிகு வையப்பமலை சுப்பிரமணியன் கோவிலுக்கு மாற்றுப் பாதை அமைக்க கடந்த3.3.25 சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பூஜை போடப்பட்டது. பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வந்தது இன்று அந்தப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் சிறப்பாகவும் விரைவாகவும் முடித்துக் கொடுக்கும்படி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது மல்லமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் உள்ளிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.