கோடங்கிபட்டி அருகே டாரஸ் லாரி மீது டூ வீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கோடங்கிபட்டி அருகே டாரஸ் லாரி மீது டூ வீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.;
கோடங்கிபட்டி அருகே டாரஸ் லாரி மீது டூ வீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சாமி பிள்ளை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் வயது 30. இவர் மே 26 ஆம் தேதி மாலை 7 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் கோடங்கிபட்டி அருகே வந்த போது, கடவூர் தாலுக்கா, வரவனை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் வயது 53 என்பவர் வேகமாக ஓட்டி சென்ற டாரஸ் லாரி ராஜகோபாலை முந்தி சென்றது. பிறகு எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் செல்வராஜ் திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த ராஜகோபாலின் டூவீலர் டாரஸ் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த ராஜகோபாலை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராஜகோபாலின் சகோதரர் பூவானந்தன் இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் , டாரஸ் லாரியை சாலை விதிகளுக்கு புறம்பாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.