ராட்சச மரம் விழுந்து பாதிப்பு
கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் பெயர்ந்து ,அருகே உள்ள ஓடை பகுதியில் விழுந்ததால் இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் தகர வீடு சேதம், ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்ப்பு;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன, மேலும் வனப்பகுதி வழியாக வரும் மின்சார கம்பிகள் மீது மரம் விழுவதால் மின் விநியோகம் துண்டிப்பு நேற்று இரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு மின் தடை ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல்− வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் அரசு மருத்துவமனை அருகே ஓரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்ததால், விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன, அதே போல ஒரு வீடும் சேதம் அடைந்துள்ளது, இந்த வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இதனையடுத்து சேதமடைந்த வீட்டினை புதுப்பித்து தர வேண்டும் என வீட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.