நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்'

அரசு அதிகாரிகள் ஆய்வு;

Update: 2025-05-27 14:57 GMT
நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' அறிவிப்பால் கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. உல்லட்டி சாலை, புதுமந்து, லவ்டேல் பகுதிகளில் மரங்கள் விழுந்தது. தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று பவர்ஷா உதவியுடன் மரத்தை அறுத்து அகற்றினர். ஊட்டி அருகே இத்தலார் எமரால்டு சாலை, பெம்பட்டி சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில், 'மண் ஆணி' அமைக்கப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மஞ்சனக்கொரை அன்பு அண்ணா நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நடைபாதை , வீடுகளின் முன்பு தடுப்பு சுவர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் போதிய அளவில் நிறைவேற்றப்படவில்லை. தற்போது பெய்த மழைக்கு ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் வீடுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்

Similar News