ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டிஜிட்டல் டிவி
அரசின் திட்டங்களை ஒளிபரப்பும் டிஜிட்டல் டிவி;
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து தங்களுடைய குறைகளை தெரிவிப்பதற்காக தினமும் பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருகை தரும் பொதுமக்களுக்கு தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் மிகப்பெரிய அளவிலான டிஜிட்டல் டிவி தற்பொழுது புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிவியில் அரசின் திட்டங்கள் ஒளிபரப்பப்படுகிறது.