அரக்கோணத்தில் பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு
அரக்கோணத்தில் பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு;
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடந்தது. இதில் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன் மனு கொடுத்தார். அதில் சித்தேரி அருந்ததி பாளையத்தில் 38 பேருக்கு பட்டா தரப்பட்டது. அதை கிராம கணக்கில் மாற்றி இ பட்டா வழங்க வேண்டும். கீழ்க்கண்டிகையில் இருந்து அண்ணா நகர் செல்லும் சாலை தார் சாலையாக அமைத்து தர மனுவில் குறிப்பிட்டிருந்தார்.