கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணி முதலிடம் பிடித்து சாதனை.
கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணி முதலிடம் பிடித்து சாதனை.;
கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணி முதலிடம் பிடித்து சாதனை. கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், டெல்லி இந்தியன் ஆர்மி அணியும் மோதியது. கரூர் கூடைப்பந்து ,கழகமும் பல்வேறு விதமான தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு இணைந்து நடத்திய எல் ஆர் ஜி நாயுடு நினைவு 65 ஆம் ஆண்டு ஆண்களுக்கான கூடை பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மே 22 ஆம் தேதி துவங்கிய தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய அளவில் சிறந்த விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். ஆண்களுக்கான போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் எட்டு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றது. இந்த போட்டிகளின் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், புதுடெல்லி இந்திய ஆர்மியும் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். ஆட்டத்தின் போது நான்கு முறை இருவரும் சம புள்ளிகள் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர இறுதியில் இருவரும் 67 புள்ளிகள் எடுத்ததால்,ஆட்ட நேரத்தை மீண்டும் ஐந்து நிமிடம் நீட்டித்தனர். அதன் பிறகு பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 82 க்கு 76 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை ஐஓபி அணி முதலிடம் பெற்றது.டெல்லி இந்திய ராணுவ அணி இரண்டாம் இடம் பெற்றது.