பிரதம மந்திரி - கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டும் திட்டத்தில் மோசடிகள் கண்டித்து

மாவட்ட வளர்ச்சி குழுமம் சார்பில் ஜூன் 9-ம் தேதி தொடர் பட்டினி போராட்டம்;

Update: 2025-05-28 07:40 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், நடைபெற்றுள்ள மோசடிகள், விதிமுறைகள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டும் திட்டத்தில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் கடந்த 3 ஆண்டுகளில் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும், தவறான முறையில் பயனாளிகள் பட்டியல் தயார் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பொதுமக்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி, கோரிக்கை மனுக்களின் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தங்களது கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வளர்ச்சி குழுமம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் நலச்சங்கம், மக்கள் அதிகார கழகம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் வருகிற ஜூன் 9-ம் தேதி திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் தொடர் பட்டினி போராட்டம் நடைபெற உள்ளது என நாகை மாவட்ட வளர்ச்சிக்குமும நிர்வாகிகள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News