பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவரின் மாற்றுச் சான்றிதழை பெற்றுத் தர நடவடிக்கை
நாகை மாவட்ட கல்வி அலுவலக உதவி எண்ணை வெளியிட்டு மாவட்ட கல்வி அலுவலர் ஆறுதல்;
நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து, அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு வெளியானதும் மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கிறார்களா? அதிக கட்டணம் கேட்கிறார்களா? பணம் கட்டினால்தான் மாற்றுச்சான்றிதழ் தருவோம் என மிரட்டுகிறார்களா? கவலை வேண்டாம். உடனடியாக மாணவர்களின் பெற்றோர் 04365 225991 என்ற நாகை மாவட்ட கல்வி அலுவலரின் உதவி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம். புகாரின்பேரில், மாவட்ட கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை பெற்றுத் தருவதுடன், அப்பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.