காந்திகிராமத்தில் டூவீலர் மீது கார் மோதி சம்பவ இடத்தில் வாலிபர் உயிரிழப்பு.

காந்திகிராமத்தில் டூவீலர் மீது கார் மோதி சம்பவ இடத்தில் வாலிபர் உயிரிழப்பு.;

Update: 2025-05-28 10:55 GMT
காந்திகிராமத்தில் டூவீலர் மீது கார் மோதி சம்பவ இடத்தில் வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், அருணாச்சலம் நகர், பஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் வயது 29. இவர் மே 26 ஆம் தேதி இரவு 10 மணியளவில், திருச்சி- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் காந்திகிராமம் தனியார் டெக்ஸ் நிறுவனம் அருகே சென்ற போது, எதிர்திசையில் , தெற்கு காந்திகிராமம் , சக்தி நகர் 6-வது கிராஸ்-சை சேர்ந்த சந்தோஷ் வயது 29 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், தமிழ்செல்வன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். தமிழ்செல்வனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த தமிழ்ச்செல்வனின் மனைவி மார்க்கிரோ ஜெயராணி வயது 28 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த தமிழ்ச்செல்வனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல் துறையினர்.

Similar News