வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.;
வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கொத்தமங்கலம் அருகே உள்ள நஞ்சப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி வயது 45. இவர் மே 25ஆம் தேதி இரவு 9 மணி அளவில், கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் , வேலாயுதம்பாளையம் மேம்பாலம் அருகே நடந்து சென்ற போது , அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பாலசுப்பிரமணி மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று . இதில் பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரமணியத்தை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பாலசுப்பிரமணியன் மனைவி செல்வி வயது 43 என்பவர் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது ? அதன் ஓட்டுனர் யார் ? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் .