உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில்

200 பொதுமக்களுக்கு மதிய உணவு;

Update: 2025-05-28 13:24 GMT
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் உத்தரவின் பேரிலும், நாகை மாவட்ட கழகச் செயலாளர் மா.சுகுமாறன் அறிவுறுத்தலின்பேரிலும்,உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு உணவு வழங்கும் விழா நடைபெற்றது. கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் கருங்கண்ணியில் நடைபெற்ற விழாவிற்கு, கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.எட்வின் சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பூபாலன் கலந்து கொண்டு, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில், கீழையூர் மேற்கு ஒன்றிய அனைத்து பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News