வாழாமங்கலத்தில் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை முறையில் நாள் ஒன்றுக்கு

100 கிலோ காய்கறிகளை உற்பத்தி செய்யும் பட்டதாரி இளைஞர்;

Update: 2025-05-28 13:36 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சி வாழாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கமல்ஹாசன். பட்டதாரி. இவர் திருமருகல் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் செல்லபாண்டியன் மூலம் ஆலோசனைகளை பெற்று, 5 - ஏக்கர் பரப்பளவில் 100 சதவீத மானிய விலையில் விதைகளை வாங்கி, ரசாயன உரங்களை தவிர்த்து விட்டு இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். இவர், கத்தரி, வெண்டை, பீர்க்கங்காய், பாகற்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு, நாள்தோறும் 100 கிலோ வீதம் காய்கறிகளை உள்ளூரிலேயே விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறார். இவரை, விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

Similar News