க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரிக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரிக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு.;

Update: 2025-05-28 14:21 GMT
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரிக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள், 500க்கும் மேற்பட்ட குக் கிராமங்களும் உள்ளது. மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கொண்டு சேர்ப்பதில் இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 30 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் க.பரமத்தியில் உள்ள யூனியன் அலுவலகத்திற்கு பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் சின்னதாராபுரத்தை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை அமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு இதே க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. குக்கிராமத்தில் வசிக்கும் கிராம ஊராட்சி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சின்ன தாராபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை அமைக்க கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Similar News